-
Notifications
You must be signed in to change notification settings - Fork 0
கணியம் அறக்கட்டளை ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் 2019 மாத அறிக்கை
தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்
அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.
1000 மின்னூல்களை ஒருங்குறி வடிவில் வாங்குவதற்கான நன்கொடை வேண்டுகோள் இங்கே - http://www.kaniyam.com/call-for-donation-to-buy-1000-books-in-unicode-format/
ஒரு இனிய செய்தி
கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகம் (UTSC) , மின்னூல்களுக்கான மொத்த தொகையையும் நன்கொடையாக அளித்துள்ளது. ஈடாக, அனைத்து நூல்களையும் குறுகிய காலத்தில், epub, mobi, PDF, HTML, txt, odt வடிவங்களில் மாற்றி,அட்டைப்படம் சேர்த்து, விரைவில் வெளியிட வேண்டும். இதற்கான முழுநேரப் பணியாளர்கள் தேர்ந்தெடுத்தல், மின்னூலாக்கப் பயிற்சிகள், ஆவணங்கள், காணொளிகள், கணியம் - டொரன்டோ பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், மின்னூல்களை பொதுக்கள உரிமையில் வெளியிடுவதற்கான அறிவிப்பு ஆவண உருவாக்கம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கான பொது அறிவிப்பு - தமிழ்மண் பதிப்பகத்தின் 1000 மின்னூல்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் அறிவிப்பு
3-4 முழுநேரப் பணியாளர்கள் நியமிக்க உள்ளதால், அவர்களுக்கான ஊதியம், இதர செலவுகளுக்கான நன்கொடைகளை வரவேற்கிறோம்.
இத்திட்டத்திற்கு தொடர்ந்து நன்கொடை அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகள்.
எண் | செயல்கள் | இந்த மாதம் | மொத்தம் | இம்மாதம் பங்களித்தோர் |
---|---|---|---|---|
1 | FreeTamikEbooks.com வெளியீடுகள் | 26 | 585 | லெனின் குருசாமி - தாரா - அ.சூர்யா - த.சீனிவாசன் - G.சுமதி |
2 | கணியம் கட்டுரைகள் | 46 | 858 | திவ்யா - ஹரிப்பிரியா, - இரா. அசோகன் - ச.குப்பன் - மகாலட்சுமி - முத்து |
3 | கணியம் காணொளிகள் | 5 | 56 | மகாலட்சுமி - கலீல் |
விக்கிமூலத்தில் கணியம் திட்டத்துக்கென ஒரு பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் திட்டத்தின் குறிக்கோள்கள், பங்களிப்போருக்கான வழிகாட்டுதல்கள் எழுதப்பட்டன. இது வரை 9 பேர் இணைந்துள்ளனர். 36 மின்னூல்கள் முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டு, சரி பார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 12 மின்னூல்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளன. விரைவில் அவை சரி பார்க்கப்படும். மின்னூல்களின் பட்டியல் இங்கே எழுதப்படுகிறது.
காண்க https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:கணியம்_திட்டம்
-
அ மார்க்ஸ் அவர்களின் சில நூல்களை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட பணிகள் நடைபெற்று வருகின்றன. காண்க
-
திராவிட ஆய்வு முக நூல் குழு - CC-BY-SA - அறிவிப்பு காண்க
-
பயணம் பதிப்பகம் நூல்களை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட பணிகள் நடைபெற்று வருகின்றன. காண்க
-
நவீனா அலெக்சாண்டர் புத்தகங்கள் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட பணிகள் நடைபெற்று வருகின்றன. காண்க
-
செ திவான் - வரலாற்று ஆசிரியர் - புத்தகங்கள் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட பணிகள் நடைபெற்று வருகின்றன. காண்க
-
ஆளூர் ஷா நவாஸ்,தொல். திருமாவளவன்- மின்னூல் அனுமதி சந்திப்பு - காண்க
-
எம் .எஸ் உதயமூர்த்தி-நூல்கள்- மின்னூல் அனுமதி சந்திப்பு - காண்க
-
மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் - கிகா உரிமத்தில் பெறுதல் மற்றும் மின்நூலாக்கம் - காண்க
-
முனைவர் நந்தினி தேவி- மின்னூல் அனுமதி சந்திப்பு - காண்க
கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் பலரும் தமது படைப்புகளை வெளியிடக் கோரி, உதவி வரும் அன்வர், கலீல் ஜாகீர் இருவருக்கும் நன்றி
சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீட்டைத் தொடர்ந்து, இணைய தளமாகவும் வெளியிட்டு உள்ளோம். தளத்தை அனிதா உருவாக்கி உள்ளார். காண்க மற்றும் sangaelakkiyam.org
1888 ல் வெளியான 'பதார்த்த குண சிந்தாமணி' நூல் வாரண்ட் பாலா அவர்கள் மூலம் கிடைக்கப் பெற்றோம். greendms.in கல்யாண் அவர்களிடம் நூலை scan செய்து தந்துள்ளார். PDF ஆக இங்கே வெளியிட்டுள்ளோம் விவரங்கள் இங்கே
தமிழின் அனைத்து பெயர்ச்சொற்களையும் தொகுக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். விவரங்கள் இங்கே
இந்த விரிதாளில் https://docs.google.com/spreadsheets/d/1FqiFLstsTo6DXsPKPKzp7iPKR49Ml2k81UPR6Nq6inQ/edit?usp=sharing மொத்தம் 90,811 பெயர்ச்சொற்கள் சேர்க்கப் பட்டுள்ளன. அயராது இப்பணிக்கு பங்களிக்கும் திவ்யா அவர்களுக்கு நன்றி.
OpenStreetMap.org ல் சென்னையில் உள்ள இடங்களை தமிழாக்கம் செய்யும் திட்டம் இது. இதன் செயல்களை இங்கே காணலாம்.
பங்களிப்போர் - அனிதா, அருணாசலம், இராமன்
எழுத்தாளர்கள் தம் படைப்புகளை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் தரும்போது, பலரும் அச்சு நூலாகவோ அல்லது PDF ஆகவே தருகின்றனர். அவற்றை, Scan, OCR, Proofread செய்து மின்னூலாக வெளியிடும் பணிகளைத் தொடங்கியுள்ளோம். தாரா அவர்கள் முழுநேரப் பணியாளராக இணைந்துள்ளார்.
பங்களிப்போர் - அன்வர் (நூல்களைப் பெறுதல்), லெனின் குருசாமி (Scan), அன்வர் (OCR), தாரா (Proofread)
இதுவரை 2600 பக்கங்கள் இதுவரை மெய்ப்பு பார்க்கப் பட்டுள்ளன. திட்டத்தின் செயல்பாடுகளை இங்கே காணலாம்.
பல்வேறு புதிய திட்டங்களுக்கான உரையாடல்களை இங்கே பதிந்து வருகிறோம். https://github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues
அவற்றுல் சில.
- சென்னை ரோஜா முத்தையா நூலகத்தின் நூல் பட்டியல் பெறுதல்
- peyar.in தளத்தில் இருந்து பெயர்களை பிரித்தல்
- PDF கோப்புகளை வெளியிட தனித்தளம் உருவாக்குதல்
- மலிவு விலை ScanBox உருவாக்கம்
- கலைக்களஞ்சியங்களை ஆவணப் படுத்துதல்
- epub ல் இருந்து HTML தளங்களை உருவாக்குதல்
- Samuel Fisk Green தமிழில் எழுதிய மருத்துவ நூல்கள் தேடுதல்
எண் | பெயர் | தொகை |
---|---|---|
1 | பெயரிலி | 500 |
2 | பெயரிலி | 2,000 |
3 | பாலவிக்னேஷ் | 3,000 |
4 | விஜயகுமார் | 10,200 |
5 | லோகேஷ் | 10,200 |
6 | இராம் குமார் | 3,400 |
7 | இராமநாதன் | 2,040 |
8 | இரஞ்சித் | 6,868 |
9 | பிரேம் குமார் | 2,070 |
10 | இரவி சங்கர் | 1,700 |
11 | ஜெபராஜ் | 1,360 |
12 | சுரேஷ் | 3,400 |
13 | பரத் | 10,000 |
14 | சிவகுமாரி ஆவுடையப்பன் | 2,000 |
15 | அமேசான் மின்னூல் விற்பனை | 810 |
16 | பெயரிலி | 500 |
17 | பெயரிலி | 300 |
18 | விஜயகுமார் | 70,424 |
மொத்தம் - ரூ 1,30,772
இணைய வளங்கள் நன்கொடைகள்
- நூலகம் அறக்கட்டளை - சர்வர் (ரூ 350/மாதம்)
- E2E Networks - சர்வர் ( ரூ 730/மாதம்)
- சசி விக்கி மூலம் 2,915
- தாரகேஸ்வரி மெய்ப்பு பார்த்தல் 24,000
- திவ்யா விக்கி மூலம் 2,265
- லோகநாதன் - தகவல் உழவன் விக்கி மூலம் 10860
- அருண் TVA விக்கி மூலம் 3315
- அன்வர் வங்கி, ஆடிட்டர், தொலைபேசி 1000
- முத்து லட்சுமி விக்கி மூலம் 3085
- தீபா அருள் விக்கி மூலம் 3147
மொத்த செலவுகள் - ரூ 50,587
மொத்தம் கையிருப்பு - ரூ 1,20,995 + ரூ 1,30,772 - ரூ50,587 = ரூ 2,01,180
இந்த இணைப்பில் அனைத்து வரவு, செலவு விவரங்கள் பகிரப்படுகின்றன. https://docs.google.com/spreadsheets/d/1zBXZzjYP_WKfm4y3EpTYw5yOTOeA-sSp8mcNjjNAUe0/edit?usp=sharing
Kaniyam Foundation
Account Number : 606 1010 100 502 79
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC - UBIN0560618
- உங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.
- நன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை [email protected] க்கு அனுப்ப வேண்டுகிறோம்.
மேலும் விவரங்களுக்கு எழுதுக - [email protected]